Friday 19th of April 2024 07:54:05 PM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 14.05.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 14.05.2020


இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 1ம் திகதி, ரம்ஜான் 20ம் திகதி, 14.5.2020 வியாழக்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி காலை 11:07 வரை, அதன்பின் அஷ்டமி திதி, திருவோணம் நட்சத்திரம் காலை 10:20 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. சூலம் : தெற்கு

• பரிகாரம் : தைலம் • சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம் • பொது: தட்சிணாமூர்த்தி, குருவாயூரப்பன் வழிபாடு.

மேஷம்

மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சி ஆதரிப்பார். சிந்தனைத் திறன் பெருகும் நாள் .

ரிஷபம்

ரிஷபம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் பழைய நினைவுகளில் மூழ்கி வீட்டில் தடைப்பட்ட வேலையைமாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூட தவறு என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

கடகம்

கடகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். புதியவர்கள் நண்பர்க ளாவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி வியப்பார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். எதிலும் மகிழ்ச்சி பெறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளை களின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அமோகமான நாள்.

கன்னி

கன்னி: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமைபடைக்கும் நாள்.

துலாம்

துலாம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ள சமவெளிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

தனுசு

தனுசு: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதைவாங்கித் தருவீர்கள். அழகும் இளமையும் கூடும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வாகன பழுது உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: எதிர்காலம் பற்றி கவலைவந்து போகும். உறவினர்கள் நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்கள் உண்டாகும். சுமாராகஇருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE