இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 3ம் திகதி, ரம்ஜான் 22ம் திகதி, 16.5.2020 சனிக்கிழமை, தேய்பிறை, நவமி திதி பகல் 1:32 வரை, அதன்பின் தசமி திதி, சதயம் நட்சத்திரம் பகல் 2:01 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், அமிர்த - மரணயோகம்.
நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. சூலம் : கிழக்கு
• பரிகாரம் : தயிர் • சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம் • பொது: பெருமாள், அனுமன், சனீஸ்வரர் வழிபாடு.
மேஷம் மேஷம்: எந்த விஷயத்தையும் எளிதில் முடிக்க முடியாமல் திணறிய நிலை மாறும். அலுவலகப் பிரச்னைகளை மிகவும் சாமார்த்தியமாக கையாளுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
ரிஷபம் ரிஷபம்: திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிகழும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. புகழ் மிக்கவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் நீண்டநாளாக உள்ள பிரச்னையைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள்.
மிதுனம் மிதுனம் : குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த குறை நீங்குவதற்கான நல்ல செய்தி கிடைக்கும். அமைதியை கடைபிடித்து வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள். சிறிய ஆசைகளுக்கு இடம் கொடுத்து பிரச்னையில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
கடகம் கடகம்: சோதனைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் சகபணியாளர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. திட்டமிட்ட விஷயத்தில் அயராது பாடுபட்டு முன்னேற்றம் அடைவீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர்.
சிம்மம் சிம்மம் : அலுவலகத்தில் மூத்த அதிகாரியிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். நெருங்கிய உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தந்தைக்கு ஏற்பட்டிருந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கும். துணிச்சலுடன் பல சாதனைகளை நிகழ்த்தி காட்டுவீர்கள்.
கன்னி கன்னி: மனதில் இருந்த பயம் நீங்குவதால் செயலில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகம் செல்வதற்கு ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வெளி வட்டார நட்பு உதவிகரமாக அமையும். புதிய தொழில் தொடங்கும் சூழல் நிலவும்.
துலாம் துலாம்: பதவி உயர்வோடு, சம்பளமும் அதிகரிக்கும். வியாபார முயற்சிகளில் சிறுசிறு இடையூறு ஏற்படும். விசாவில் இருந்த சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் செயல்பாடுகள் குதுாகலமாக அமையும். பூர்வ சொத்தின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.
விருச்சிகம் விருச்சிகம்: அநாவசியக் கவலைகள் பட வேண்டாம். முயற்சிகளை அதிகரிப்பதன் மூலம் வெற்றிகள் வந்து சேரும். வெளிநாட்டு பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும். சரியான நேரத்தில் முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். மாணவர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும்.
தனுசு தனுசு: முன்பு தடைப்பட்டிருந்த புதிய வேலை கிடைக்கும். கணவன் மனைவி இடையே சில நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். வியாபாரிகள் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.
மகரம் மகரம்: மிகுந்த முயற்சியுடன் செய்யும் செயல்கள் யாவும் வெற்றியில் முடியும். அலுவலகப் பணியாளர்கள் சவாலான விஷயங்களை முடித்துக் காட்டுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பெண்களின் பொறுமையைச் சோதிக்கக்கூடிய செயல்கள் நடக்கும்.
கும்பம் கும்பம்: வீடு, மனை வாங்குவீர்கள். பெண்களுக்கு மிகுந்த முயற்சியின் பேரில் பொன், பொருள் சேரும். வாகனம் சம்பந்தமான தொழிலில் லாபம் கூடும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். மகளுக்கு எதிர்பார்த்த வரன் அமைவதால் மகிழ்ச்சி கொள்வீர்கள்.
மீனம் மீனம்: நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியை பெறுவீர்கள். வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொள்வர். பகை பாராட்டிய உறவினர்கள் தானாக வந்து இணைந்து கொள்வார்கள்.