Wednesday 24th of July 2024 11:05:47 AM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 22.05.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 22.05.2020


இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 9ம் தேதி, ரம்ஜான் 28ம் தேதி, 22.5.2020 வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி இரவு 11:54 வரை, அதன்பின் பிரதமை திதி, கார்த்திகை நட்சத்திரம் நள்ளிரவு 3:55 வரை, அதன்பின் ரோகிணி நட்சத்திரம், சித்த - மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. சூலம் : மேற்கு

• பரிகாரம் : வெல்லம் • சந்திராஷ்டமம் : சித்திரை • பொது: கார்த்திகை, அமாவாசை விரதம், மகாலட்சுமி, முருகன் வழிபாடு, பிதுர் தர்ப்பணம்

மேஷம்

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்தபொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். கண் கால் வலிக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிக ரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர் உதவிகரமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரி முக்கியத்துவம் தரும் நாள்.

சிம்மம்

சிம்மம்: அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள் நற்பலன்கள் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கு வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். மாற்றங்கள் நிறைந்த நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர்களை நம்பி முக்கியமுடிவுகள் எடுக்க வேண்டாம். உடல்நலம் பாதிக்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்திஉண்டு. கல்யாண பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அமோகமான நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் களின் வருகையால் வீடு களைக் கட்டும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரியபொறுப்புகள் தேடி வரும். வெற்றி பெறும் நாள் .

மகரம்

மகரம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்துயோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்

கும்பம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராதஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல் வந்து நீங்கும். நட்பு வட்டம் விரியும். பயணங்களால் நன்மை பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகளை பெறுவீர்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

மீனம்

மீனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறை வேறும். துணிச்சலுடன் செயல்படும் நாள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE