Wednesday 29th of November 2023 01:20:05 PM GMT

LANGUAGE - TAMIL
.
3 தசாப்தங்களுக்கு பின்னர் மீண்டும் நடிக்க வரும் பிரபல நடிகை!

3 தசாப்தங்களுக்கு பின்னர் மீண்டும் நடிக்க வரும் பிரபல நடிகை!


தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அமலா 30 வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா கமலஹாசன், ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ளார்.

பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து புகழ் பெற்ற அமலா 1991 ஆம் ஆண்டு வெளிவந்த கற்பூர முல்லை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதுவே நடிகை அமலாவின் கடைதி திரைப்படமாக அமைந்திருந்தது.

இந்நிலையில் 30 வருட இடைவெளியில் மீண்டும் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

கணம் எனும் தமிழ் திரைப்படத்தில் அமலா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஸ்ரீகார்த்திக் இயக்கும் இத்திரைப்படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கின்றார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE