Tuesday 28th of January 2025 03:57:46 PM GMT

LANGUAGE - TAMIL
.
தளபதி-66 திரைப்படத்தில் விஜயுடன் இணையும் மகேஷ் பாபுவின் மகள்!

தளபதி-66 திரைப்படத்தில் விஜயுடன் இணையும் மகேஷ் பாபுவின் மகள்!


விஜய் நடிக்க உள்ள தளபதி-66 திரைப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் மகள் நடிக்க உள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி பைடி பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வம்சி பைடி பல்லி - விஜய் இணையும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது.

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சிடாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாம். கதை பிடித்துப்போனதால் அவரும் தனது மகளை நடிக்க வைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE