Thursday 21st of November 2024 02:44:24 AM GMT

LANGUAGE - TAMIL
-
கடும் எதிர்ப்புக்களை அடுத்து யொஹானியுடன்  எடுத்த புகைப்படத்தை நீக்கினார் ஹாரிஸ் ஜெயராஜ்!

கடும் எதிர்ப்புக்களை அடுத்து யொஹானியுடன் எடுத்த புகைப்படத்தை நீக்கினார் ஹாரிஸ் ஜெயராஜ்!


தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பலைகளை அடுத்து இலங்கைப் பாடகி யொஹானி த சில்வாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது ருவிட்டரில் இருந்து பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நீக்கியுள்ளார்.

யொஹானியின் தந்தை ஓய்வுபெற்ற இலங்கை மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா. இவா் 2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டத்தின் இறுதி கட்டத்தின் போது இலங்கை இராணுவத்தின் 55 வது பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவா் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஓய்வுபெற்ற இலங்கை மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா மகளான யொஹானி 'மெனிகே மகே ஹிதே' என ஆரம்பிக்கும் சிங்களப் பாடல் வெளியிட்டார். இது இலங்கை, இந்தியாவில் பிரபலமானது. இலட்சக்கணக்கானவர்கள் சமூக வலைத்தளங்களில் இதனைப் பார்வையிட்டனர். இந்தப் பாடல் "பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடியதற்காக" தனது தந்தையை "ஹீரோ" என புகழும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் சென்றிருந்த யொஹானியை சந்தித்த ஹாரிஸ் ஜெயராஜ் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ருவிட்டரில் பதிவிட்டு அவரைப் புகழ்ந்திருந்தார்.

இதனைடுத்து உடனடியாக அவரது இந்த ருவிட்டர் பதிவு தொடர்பில் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பின. இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள், போர்க்குற்றங்கள் உள்ளிட்டவற்றுடன் யொஹானியின் தந்தைக்கு இருந்த பங்குகளைச் சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்தே இலங்கைப் பாடகி யொஹானி த சில்வாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது ருவிட்டரில் இருந்து பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நீக்கியுள்ளார்.

இதற்கிடையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றிருந்த பாடகி யொஹானி த சில்வா நேற்றிரவு இலங்கை திரும்பினார்.

விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனக்கு அதிகளவான எதிர்ப்பார்ப்புகள் இருப்பதாக கூறினார்.

சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE