பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மாற்றுவதற்கு, அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி மார்க் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அண்மைய காலங்களில் பேஸ்புக் செயலிகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக அந்நிறுவனத்தின் செயல்பாடுகளால் அமெரிக்கா கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் புதிய பெயரில், ஒற்றை தாய் நிறுவனத்தின் கீழ் அதனுடைய ஒரேயொரு செயலியில், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஓகலஸ் உள்ளிட்ட பிற செயலிகளைப் பெற வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
த வெர்ஜ் என்ற இதழில் வெளியாகியிருக்கும் தகவலின்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள பேஸ்புக்கின் வருடாந்த மாநாட்டில் மார்க் ஸக்கர்பர்க் இதுகுறித்து அறிவிப்பை வெளியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் அதற்கு முன்னரே அடுத்த வாரத்தில் கூட பேஸ்புக்கின் புதிய பெயர் வெளியாகலாம் எனவும் பேஸ்புக் நிறுவன தகவல்களின் அடிப்படையில் தி வெர்ஜ் தெரிவித்துள்ளது.
ஆனால், ஊகங்களுக்குப் பதிலளிக்க முடியாது என பேஸ்புக் மறுத்துள்ளது.
Category: தொழில்நுட்பம், புதிது
Tags: உலகம்