தமிழ்த் திரை உலக பிரபலங்களான கமல், பாரதிராஜா மற்றும் இளையராஜா ஆகியோருக்கும் தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என இந்திய மத்திய அரசுக்கு வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் நடைபெற்ற 67 வது இந்திய தேசிய விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு விருது பெற்ற ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே மேற்படி வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில்இ “பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம். கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்” என பதிவிட்டுள்ளார். Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, புது தில்லி