Thursday 25th of April 2024 07:47:37 PM GMT

LANGUAGE - TAMIL
.
பீஸ்ட்; அமெரிக்காவில் டிக்கெட் முன் விற்பனையில் 350,000 டொலர்களை கடந்து சாதனை!

பீஸ்ட்; அமெரிக்காவில் டிக்கெட் முன் விற்பனையில் 350,000 டொலர்களை கடந்து சாதனை!


விஜய் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் 'பீஸ்ட்' திரைப்படம், அமெரிக்காவில் டிக்கெட் முன் விற்பனையில் 350,000 டொலர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' திரைப்படம் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13ம் திகதி வெளியாக உள்ளது.

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட அந்த டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் அமெரிக்க திரையரங்கும் ரிலீஸ் உரிமத்தை வலிமை போன்ற பல படங்களின் அமெரிக்க வினியோகஸ்தர்களான ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் & அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளது.

தற்போது பீஸ்ட் படத்தின் டிக்கெட் முன்பதிவு உலகம் முழுவதும் துவங்கி உள்ள நிலையில் அமெரிக்காவில் ஒரு நாள் முன்பு ஏப்ரல் 12 மாலை 3.30 மணிக்கு (இந்திய நேரப்படி ஏப்ரல்13 அதிகாலை 5 மணி அளவில்) முதல் காட்சி திரையிடப்படுகிறது.

இதற்கான டிக்கெட் விலையாக 20 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 1510 ரூபாய் ஆகும். மேலும் இப்படம் அமெரிக்காவில் டிக்கெட் முன் விற்பனையில் 350,000 டொலர்களை கடந்துள்ளது. இந்திய மதிப்பில் 2,65,74,138.05 கோடி ரூபாய் ஆகும்.

ரிலீஸுக்கு முன்னரே பீஸ்ட் படம் வசூலை அளிக்குவித்ததை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, அமெரிக்கா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE