Wednesday 22nd of March 2023 05:31:51 AM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு பாராளுமன்றில் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு பாராளுமன்றில் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி


உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு பாராளுமன்றத்தில் இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சபாநாயகரிடம் ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த வேண்டுகோளை ஏற்று சபையில் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

முதலில் அஞ்சலி செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி விடுத்த கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் சஜித் பிரேமதாச இதே கோரிக்கையை வலியுறுத்தியதை அடுத்து இறுதியில் சபாநாயகர் ஒப்புக்கொண்டார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் இன்று கருப்பு நிற ஆடைகளை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்தனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இதே நாளில் கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்றபோது குண்டுகள் வெடித்தன. அத்துடன், நட்சத்திர விடுதிகளும் இலக்குவைக்கப்பட்டன. இந்தத் தாக்குதலிகளில் 269 பேர் கொல்லப்பட்டதுடன், 500-க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE