யாழ்ப்பாணம் வந்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியோன் சுங் (jule jiyoon chung) சிவில் சமூக பிரதிநிதிகளை இன்று சந்தித்துப் பேசினார்.
எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளுக்காக வாதிடுவதன் மூலம் சிவில் சமூகம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து விவாதிப்பதற்கும் ஜனநாயக இலங்கைக்கான எமது ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதற்கும் நான் யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகத் தலைவர்களைச் சந்தித்தேன் என இச்சந்திப்புக் குறித்து அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியோன் சுங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தூதுவர் இன்று மதியம் யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
அடுத்த சில நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் அவர், பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.