Thursday 25th of April 2024 10:21:23 PM GMT

LANGUAGE - TAMIL
-
397 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இலங்கை அணி – ஒரு ஓட்டத்தால் இரட்டை சதத்தை இழந்த மெத்யூஸ்!

397 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இலங்கை அணி – ஒரு ஓட்டத்தால் இரட்டை சதத்தை இழந்த மெத்யூஸ்!


இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி தமது முதல் இனிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 397 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில், அஞ்சலோ மெத்யூஸ் தமது 12ஆவது சதத்தினை பூர்த்தி செய்து 199 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். ஒரு ஓட்டத்தால் இரட்டை சதத்தை இழந்தார்.

அத்துடன், தினேஷ் சந்திமால் 66 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 54 ஓட்டங்களையும், ஓசத பெர்னாண்டோ 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியின் நயீம் ஹசன் 30 ஓவர்கள் பந்துவீசி 105 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE