Friday 26th of April 2024 06:10:50 AM GMT

LANGUAGE - TAMIL
-
ரஷ்யாவிடம் இருந்து தங்க இறக்குமதிக்கு  தடை விதிக்க ஜி-7 நாடுகள் கூட்டாக முடிவு!

ரஷ்யாவிடம் இருந்து தங்க இறக்குமதிக்கு தடை விதிக்க ஜி-7 நாடுகள் கூட்டாக முடிவு!


ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் கடுமையாக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்ய அமெரிக்கா உள்ளிட்ட ஜி-7 நாடுகளின் குழு தடை விதிக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இது உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போரை தொடுத்துள்ள ரஷ்யாவை பொருளாதார ரீதியாக மேலும் தனிமைப்படுத்தும் என ஜி-7 தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஜி-7 அமைப்பின் 48-வது உச்சி மாநாடு ஜெர்மனியின் ஸ்லாஸ் எல்மவ் நட்சத்திர விடுதியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்றும் நாளையும் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இன்னிலையில் மாநாட்டின் இறுதி நாளான நாளை செவ்வாய்க்கிழமை ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் முடிவை ஜி-7 தலைவர்கள் கூட்டாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்க ஏற்றுமதி ரஷ்யாவிற்கு பல்லாயிரக்கணக்கான டொலர்களை சம்பாதித்து கொடுக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தின் இறக்குமதியை நாங்கள் தடைசெய்வோம். இதனை ஜி7 நாடுகள் கூட்டாக அறிவிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி பைடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தங்கத்தின் மீதான தடை ரஷ்ய தன்னலக்குழுக்களை நேரடியாக தாக்கும் மற்றும் புடினின் போர் இயந்திரத்தின் இதயத்தில் தாக்கும் என பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கருத்து வெளியிட்டுள்ளார்.

அர்த்தமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான போரில் புடின் வளங்களை வீணடிக்கிறார். எனவே, பொருளாதார ரீதியில் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் எனவும் போரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.

சக ஜி-7 உறுப்பு நாடுகளான கனடா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து எடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையாக பிரிட்டனால் இந்த நடவடிக்கை ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எரிசக்திக்கு அடுத்தபடியாக, ரஷ்யாவிற்கு இரண்டாவது பெரிய வருவாயை ஈட்டித் தருவது தங்க ஏற்றுமதியாகும். புடின் மற்றும் ரஷ்யாவிற்கு குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரமாக தங்க ஏற்றுமதி உள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகள், எரிசக்தி நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், உயர் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவின் பொருளாதாரம் ஏற்கனவே பெரும் அழுத்தத்தில் உள்ளது.

இப்போது, தங்கச் சந்தையிலும் தடை என்பது ரஷ்யாவின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

2020 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் மொத்த தங்க ஏற்றுமதியில் ஐந்து வீதம் மற்றும் ரஷ்யாவின் மொத்த உற்பத்தியில் 90 சதவிகிதம் G7 நாடுகளுக்கு சென்றது என வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE