Tuesday 7th of May 2024 10:24:27 PM GMT

LANGUAGE - TAMIL
-
முதல் இனிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில்  அவுஸ்திரேலிய அணி 313 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது!

முதல் இனிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில் அவுஸ்திரேலிய அணி 313 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது!


இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில் அவுஸ்திரேலிய அணி தமது முதல் இனிங்ஸில் 08 விக்கெட்டுக்களை இழந்து 313 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பாடிய இலங்கை அணி முதல் நாள் நிறைவடைவதற்குள் 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அணிசார்பில் அதிகபடியாக நிரோஷன் திக்வெல்ல 58 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்யூஸ் 39 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணியின் நெதன் லயன் 90 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்வெப்சன் 55 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி இன்றைய நாள் (இரண்டாம் நாள்) ஆட்ட நேர முடிவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 313 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அணிசார்பில், அதிகபடியாக கேமரூன் கிரீன் 77 ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா 71 ஓட்டங்களையும், அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி, முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியைவிட அவுஸ்திரேலிய அணி 101 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

களத்தில் பெட் கம்மின்ஸ் 26 ஓட்டங்களுடனும் நெதன் லயன் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் ரமேஷ் மெண்டிஸ் 107 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும், ஜெப்ரி வெண்டர்சே 68 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE