Sunday 8th of September 2024 07:58:54 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழிலிருந்து பயணித்த அரச பேருந்தில் நடத்துனரிடம் பணம் பறித்தது கும்பல்! 59,177 ரூபா பறிபோனது!

யாழிலிருந்து பயணித்த அரச பேருந்தில் நடத்துனரிடம் பணம் பறித்தது கும்பல்! 59,177 ரூபா பறிபோனது!


யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி அவரிடமிருந்து 59 ஆயிரத்து 177 ரூபா பணத்தினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் சற்று முன்னர் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மூவரும் யாழ்ப்பாணத்திலிருந்து பயணத்து உமையாள்புரம் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர்.

அவர்கள் இறங்குவதற்காக நடத்துனர் இடம்விட முற்பட்டபோது அவரைத் தள்ளிவிழுத்தி அவரிடமிருந்த பணத்தினைப் பறித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

அவர்கள் இறங்கிய இடத்தில் வேறு சிலரும் காத்திருந்ததாக பேருந்தில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

பேருந்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தரித்திருப்பதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE