ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு நாளை ஆரம்பமாக உள்ள நிலையில் நல்ல போட்டியை கொடுக்க இலங்கை அணி தயாராக உள்ளதாக இலங்கை அணி வீரர் பானுக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் ஆரம்பப் போட்டி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நாளை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி நாளை (27) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
15 நாட்களில் 13 போட்டிகளுக்குப் பிறகு, அடுத்த ஓராண்டுக்கு ஆசிய சாம்பியன் பட்டம் வெல்லும் அணி தேர்வு செய்யப்படும்.
அதற்காக ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த 6 அணிகள் மோதவுள்ளதுடன், அந்த 6 அணிகளும் முதற்கட்ட சுற்றில் ஏ, பி என இரு குழுக்களாகப் போட்டியிடும்.
இதில் 4 அணிகள் ஆரம்ப சுற்று முடிவில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற உள்ளன.
சூப்பர் 4 போட்டிச் சுற்றும் லீக் முறையின் கீழ் நடைபெறவுள்ளதுடன், அந்தச் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கும் இரு அணிகளும் ஆசியக் கிண்ணத்தை வெல்வதற்கான இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.
போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடுவதில் எங்களுக்கு பெரிய நன்மை இருக்கின்றது.
நாங்கள் நன்றாக தயாராகி வருகிறோம். இலங்கைக்கு வருவதற்கு முன், பல பயிற்சிப் போட்டிகளை நடத்தி வந்துள்ளோம்.
எனவே எங்கள் போட்டியை எதிர்கொண்டு நல்ல வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையில் நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்று நினைக்கிறேன்.
எனவே, ஆப்கானிஸ்தானுடன் நல்ல போட்டியை கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை, உலகம்