Saturday 27th of July 2024 03:29:29 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஆசியக் கிண்ணம்; முதல் போட்டியில் இலங்கையை வென்றது ஆப்கானிஸ்தான்!

ஆசியக் கிண்ணம்; முதல் போட்டியில் இலங்கையை வென்றது ஆப்கானிஸ்தான்!


ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி முதலாவது போட்டியில் இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகியது.

தொடரின் முதல் போட்டியாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் பானுக ராஜபஷ 38 ஓட்டங்களையும் சாமிக கருணாரத்ன 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் ஃபசல்ஹக் ஃபாரூக்கி 3 விக்கெட்களை அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 106 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 40 ஓட்டங்களையும் Hazratullah Zazai 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE