2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் பொட்டி இன்று இடம்பெறவுள்ளது.
துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.
இறுதிப்போட்டிக்கான ஒத்திகை போட்டியாக நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில், இன்றைய இறுதிப்போட்டிக்கு ஆர்வாத்துடனும், உற்சாகத்துடனும் காத்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர் ஒரு சிறந்த போட்டியில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம் ஆனாலும் நாங்கள் இன்றைய போட்டிக்கு தயாராகவே இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் போன்ற ஒரு சிறந்த கிரிக்கெட் அணிக்கு தலைவராக செயற்படுவது பெருமையளிப்பதாக பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
சுப்பர் - 4 சுற்றில் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை பாபர் மீண்டும் சுட்டிக்காட்டினார்.
“எங்கள் சுற்றுப் போட்டிகள் மிகவும் நெருக்கமாக இருந்தன, குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி. நசீம் அந்த சிக்ஸர்களை அடிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.
அத்துடன், இன்றைய இறுதிப் போட்டி சிறப்பானதாக அமையும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்த பாபர் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிகளும், நாணய சுழற்சியில் வெற்றி பெறும் அணிகளும் பெரும்பாலும் இந்த தொடரில் வெற்றியை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஆட்டநேரம்: இரவு 7.30 மணி
இடம்: துபாய்
நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை