பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய மற்றும் ஆசிய கிண்ணம் பெற்ற வீரர்கள், வலைப்பந்து சம்பியன்களான வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (16) இடம்பெறுகின்றது.
ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா 2 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
அத்துடன் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு 10 மில்லியன் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வென்றவருக்கு 5 மில்லியன் ரூபாவும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு விளையாட்டு நிதியில் இருந்து 25 சதவீதத்தை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மஹரகம வைத்தியசாலைக்கு நன்கொடையாக 5 இலட்சம் அமெரிக்க டொலர் காசோலையை இலங்கை கிரிக்கெட் சங்கம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை