மகாராணி 2ஆம் எலிசபெத்தின் இறுதி நிகழ்விற்கு ரஷ்ய இராஜதந்திரிகர்கள் எவருக்கும், பிரித்தானியா அழைப்பு விடுக்காமைக்கு ரஷ்யா தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
உலகளாவிய ரீதியாக எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு தமது உளபூர்வமான இரங்கலை வெளியிடும் இந்த தருணத்தில் ரஷ்யா முற்று முழுதாக ஓரங்கட்டப்பட்டமை கண்டனத்திற்கு உரிய விடயம் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா ரஷ்யாவை முற்றாக நிராகரிப்பதற்கு முன்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பிரித்தானிய மகாராணியாரின் இறுதி நிகழ்வில் தாம் கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்திருந்தார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆரம்பித்ததன் பின்னர், பிரித்தானியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான இராஜதந்திர உறவுகள் முற்றாக துண்டிக்கப்பட்டன.
ரஷ்யா போன்று சிரியா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான், பெலாரஸ் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.இதேவேளை, மறைந்த 2ஆம் எலிசபெத் மகாராணியாரின் எட்டு பேரப்பிள்ளைகளும் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் அவரது பேழைக்கருகாமையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.