Saturday 12th of October 2024 02:35:10 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த நன்மடோல் புயலால் இருவர் பலி; 90 இலட்சம் பேர் பாதிப்பு!

ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த நன்மடோல் புயலால் இருவர் பலி; 90 இலட்சம் பேர் பாதிப்பு!


ஜப்பானை நேற்று தாக்கிய நன்மடோல் புயல் (Typhoon Nanmadol)காரணமாக பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

ஜப்பானில் சமீபத்திய தசாப்தங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய புயல்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் நன்மடோல் புயல் தாக்கங்களால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்தமை இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 90 பேர் காயமடைந்துள்ளனர். 90 இலட்சம் பேர் இந்தப் புயல் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 350,000 வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புயலைத் தொடர்ந்து நிலச்சரிவு மற்றும் வெள்ளம் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் 400 மி.மீ. மழை பெய்யும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவில் நேற்று புயல் தாக்கியது. இதன்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் காற்றில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. வீதிகளில் சென்ற வாகனங்கள் கவிழ்ந்து உருண்டன. கடலில் பல அடி உயரத்துக்கு இராட்சத அலைகள் எழும்பின. புயலின் காரணமாக சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உடனடியாக வெள்ளம் சூழந்தது.

இடைவிடாமல் கொட்டிய கடும் மழையால் முக்கிய நீர்நிலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. நெருஞ்சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் குடிநீர் வினியோகம், தகவல் தொடர்பு உள்ளிட்டவையும் தடைப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 90இலட்சம் பேர் புயல் இயற்கை அனர்த்த எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

புயல் காரணமாக கியாஷூ தீவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், படகு போக்குவரத்து மற்றும் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.

இதனிடையே 'நான்மடோல்' புயல் தற்போது ஜப்பானின் தலைநகர் டோக்கியோவை நோக்கி நகர்ந்து வருவதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE