தாய்வான் பிரச்சினை சீனாவின் உள் விவகாரம். இதில் தலையிட அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை என சீனா மீண்டும் உறுதியாக வலியுறுத்தியுள்ளது.
தாய்வான் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. ஒரே சீனக் கொள்கையின் கீழ் தாய்வானை அமைதியான முறையில் ஒருங்கிணைக்கும் சீனாவின் முடியில் எந்த மாற்றமும் இல்லை. ஒரே நாடு இரண்டு கட்டமைப்புக்கள் என்ற கொள்ளை தாய்வான் விவகாரத்தில் கையாளப்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை 77 அவர்வின்போது சீன மக்கள் குடியரசின் நிரந்தர தூதரகத்தின் தளத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கனை நேற்று வெள்ளிக்கிழமை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சந்தித்துப் பேசினார். இதன்போதே தாய்வான் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை வாங் யி தெளிவுபடுத்தினார்.
தாய்வான் சுதந்திர தனி நாடாக உருவாவது முற்றிலும் சாத்தியமற்றது. தாய்வான் சுதந்திரத்திரத்துக்கான நடவடிக்கைகள் எவ்வளவு அதிகமாக நடக்கிறதோ, அந்த அளவுக்கு தாய்வான் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் குறையும் எனவும் வாங் கூறினார்.
தாய்வானின் தனிநாட்டுக் கொள்கையை எதிர்ப்பதன் மூலமே தாய்வான் ஜலசந்தியில் உண்மையான அமைதியை பேண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இந்த விடயத்தில் ஆழமான முரண்பாடுகள் உள்ளன. தாய்வான் விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடாது. ஒரே சீனக் கொள்கையில் அமெரிக்கா தொடர்ந்தும் உறுதியுடன் இருக்க வேண்டும் எனவும் வாய் யி வலியுறுத்தியதாக சீன அரச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.