Thursday 16th of May 2024 10:30:40 PM GMT

LANGUAGE - TAMIL
-
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு - வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் கவலை!

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு - வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் கவலை!


உள்ளூர் சந்தையில் 50 கிலோகிராம் கோதுமை மா மூட்டையொன்றின் விலை 21 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக கிராமப்புறங்களில் உள்ள பல வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாம் கோரியுள்ள கோதுமை மா கிடைக்கப்பெற்றதன் பின்னர் கோதுமை மாவின் விலை குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE