Thursday 16th of May 2024 10:17:50 PM GMT

LANGUAGE - TAMIL
-
மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் விற்பனை சந்தை!

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் விற்பனை சந்தை!


உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் விற்பனைச் சந்தை இன்று திங்கள் கிழமை (26) மாந்தை கிழக்கு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

குறித்த பிரதேச விற்பனைச் சந்தையின் ஆரம்ப நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் சம்பிராதாயபூர்வமாக நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது பல்வேறு உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனைக் கண்காட்சி கூடங்கள் அமைக்கபட்டிருந்தன.

மேற்படி பிரதேச விற்பனைச் சந்தையின் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ,கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோதர்கள், சிறு தொழில் முயற்சியாளர்கள், பொதுமக்கள் எனப் பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE