Thursday 21st of November 2024 05:20:35 AM GMT

LANGUAGE - TAMIL
.
ரஷ்ய பாடசாலைக்குள் ஆயுததாரி வெறியாட்டம்; 11 மாணவர்கள் உட்பட 17 பேர் சுட்டுக் கொலை

ரஷ்ய பாடசாலைக்குள் ஆயுததாரி வெறியாட்டம்; 11 மாணவர்கள் உட்பட 17 பேர் சுட்டுக் கொலை


ரஷ்யாவில் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்து அப்பாடசாலை பழைய மாணவன் ஒருவர் வெறித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 24 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் 11 சிறுவர்கள் அடங்குவதாக ரஷ்ய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டவர்களின் அடங்குவதாக புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பாடசாலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தய பின்னர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்த ஆயுததாரியின் செயலை பயங்கரவாத நடவடிக்கை என ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் விமர்சித்துள்ளது.

தலைநகர் மொஸ்கோவில் இருந்து கிழக்கே உட்முர்டியா பகுதியில் 960 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இஷெவ்ஸ்கில் உள்ள பாடசாலையிலேயே நேற்று திங்கட்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்தப் பாடசாலையில் தரம் 01 முதல் 11 வரையிலான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். தாக்குதலில் 11 சிறுவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டதாவும் 22 சிறுவர்கள் உட்பட 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கொடூர படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஆயுததாரி சடலமாக மீட்கப்பட்ட போது அவரது உடையில் நாஜி சின்னங்கள் காணப்பட்டதாக விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.

பெரிய குற்றங்களைக் கையாளும் ரஷ்யாவின் விசாரணைக் குழு, குற்றவாளியின் சந்தேகத்திற்குரிய நவ-நாஜி தொடர்புகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிதாரி மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் எனத் தெரிவித்துள்ள சம்பவம் இடம்பெற்ற பிராந்தியமாக உட்முர்டியாவின் ஆளுநர் அலெக்சாண்டர் ப்ரெச்சலோவ், தாக்குதலுக்குப் பின் துப்பாக்கிதாரி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறினார். 1988 இல் பிறந்த உள்ளூர் வாசியான கொலையாளி, இதே பாடசாலையில் படித்து வெளியேறியவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொலையாளியின் நோக்கம் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை ஒரு நவ-பாசிச அமைப்பு அல்லது குழுவைச் சேர்ந்த ஒரு நபரின் பயங்கரவாத செயல் எனவும் அவர் விவரித்தார்.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE