Saturday 12th of October 2024 12:35:27 AM GMT

LANGUAGE - TAMIL
.
உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்குமாறு ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் அழைப்பு

உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்குமாறு ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் அழைப்பு


உக்ரைனின் லுஹான்ஸ்க், கொ்சான் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளுமாறு இந்தப் பிராந்தியங்களில் தலைவர்களான ரஷ்ய ஆதரவுப் பிரிவினைவாதிகள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அழைப்பு விடுத்துள்ளனா்.

இங்கு இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் ரஷ்யாவுடன் இணைய பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அழைப்பை பிராந்திய தலைவர்கள் விடுத்துள்ளனா்.

எனினும் அந்தப் பகுதிகளில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு சட்டவிரோதமானது. ஏற்றுக்கொள்ள முடியாதது என உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்துள்ளன.

ஆனால் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ரஷ்யாவுடன் இணைய பெரும்பாலானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா். எனவே, இந்தப் பிராந்தியத்தை ரஷ்ய ஜனாதிபதி புடின் தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என இப்பிராந்திய நிா்வாகத் தலைவா் லியோனிட் பசேஷ்னிக் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் இராணுவத்தினரால் லுஹான்ஸ்க் பிராந்திய மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை ஜனாதிபதி புடின் மேற்கொள்ள வேண்டும் என்றும் பசேஷ்னிக் குறிப்பிட்டுள்ளார்.

கொ்சான் பிராந்திய நிா்வாகத் தலைவா் விளாடிமிர் சால்டோவும் இதே கருத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்து, தங்கள் பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று புடினுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்ட மற்ற இரு ரஷ்ய ஆக்கிரமிப்பு உக்ரைன் பிரதேசங்களின் தலைவா்களும் இதே போன்ற கோரிக்கையை விரைவில் விடுப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த ஜனாபதிபதி விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடர்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷ்யாவுடன் உதவியுடன் கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றினர். அதே நேரத்தில் ரஷ்யாவும் உக்ரைனின் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

அந்த இணைப்புக்கு முன்னதாக, அது குறித்து பொதுமக்களின் கருத்தைக் கேட்பதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனை அந்தப் பகுதியைச் சோ்ந்த உக்ரைன் ஆதரவாளா்கள் புறக்கணித்தனா். எனினும், பொது வாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்காளர்கள் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அதனை அடிப்படையாகக் கொண்டு கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. எனினும், அந்தப் பொதுவாக்கெடுப்பு போலியானது என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி, கிரிமியா இணைப்பை நிராகரித்தன.

இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24-ஆம் திகதி படையெடுத்தது.

அதன் ஒரு பகுதியாக டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் இன்னும் அரசுப் படைகள் வசமிருக்கும் பகுதிகளை கைப்பற்றுவதற்காக கிளா்ச்சியாளா்கள் உடன் இணைந்து ரஷ்யப் படையினர் சண்டையிட்டு முன்னேறி வருகின்றனர்.

மேலும், கிரீமியா தீபகற்பத்திற்கும் டான்பாஸ் பிராந்தியத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவற்காக இடைப்பட்ட பகுதிகளையும் ரஷ்யப் படையினர் கைப்பற்றினா்.

இந்த நிலையில், ரஷ்யாவுடன் இணைவது தொடா்பான பொதுவாக்கெடுப்பு, அந்த நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளான லூஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா, டொனட்ஸ்கில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

‘ரஷ்யாவுடன் இணைய விருப்பமா?’ என்ற கேள்விக்கு, ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற பதிலைத் தோ்ந்தெடுப்பதற்கான இந்த பொதுவாக்கெடுப்பில், ரஷ்யாவுக்கு ஆதரவாகத்தான் முடிவுகள்தான் வெளியாகும் என்று மேற்கத்திய நாடுகள் விமா்சித்தன.

அதைப் போலவே, ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து 97 சதவீதம் போர் வாக்களித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில், உக்ரைனின் லுஹான்ஸ்க், கொ்சான் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளுமாறு இந்தப் பிராந்தியங்களில் தலைவர்களான ரஷ்ய ஆதரவுப் பிரிவினைவாதிகள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அழைப்பு விடுத்துள்ளனா்.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE