சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த இயன் சூறாவளி புளோரிடாவின் வளைகுடா கடற்கரையை தாக்கி அழிவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தப் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் சுமார் 2,000 விமானங்கள் இன்று வியாழக்கிழமை இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
சூறாவளி அமெரிக்க விமானப் பயணத்தில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென்கிழக்கு அமெரிக்காவில். செவ்வாய்கிழமை முதல் நாளை வெள்ளிக்கிழமை வரை 5,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
புளோரிடா விமான நிலையங்கள் தற்காலிகமாக செயல்பாடுகளை நிறுத்தியதால், நேற்று புதன்கிழமை இந்த விமான நிலையங்கள் ஊடாக சேவையில் ஈடுபடும் 2,163 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டன.
இன்று வியாழக்கிழமை 1,935 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் நாளை வெள்ளிக்கிழமை 738 விமானங்கள் இரத்து செய்யப்படவுள்ளதாகவும் விமான கண்காணிப்பு இணையதளமான ப்ளைட்அவேர் ( Flightaware) தெரிவித்துள்ளது.