பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் போராட்டம் கிழக்கில் இன்றும் நடைபெற்றது.
இன்று காலை மட்டக்களப்பு - ஏறாவூர் மணிக்கூடு கோபுரத்தடியில் மக்களின் பேராதரவுடன் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள் மற்றும் தமிழ், முஸ்லிம் மக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு