Saturday 12th of October 2024 12:54:29 AM GMT

LANGUAGE - TAMIL
-
தேசிய சபையின் அங்குரார்ப்பண கூட்டம் இன்று!

தேசிய சபையின் அங்குரார்ப்பண கூட்டம் இன்று!


புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய சபையின் அங்குரார்ப்பண கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றது.

பிரதமர் தினேஸ் குணவர்தன, அவை தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர்,பிரசன்ன ரணதுங்க, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல, அமைச்சர் டிரன் அலஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான்,சிசிர ஜயக்கொடி, நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாகர காரியவசம், அலி சப்ரி ரஹீம், ரோஹித அபேகுணவர்தன, வஜிர அபேவர்தன, சிவனேசத்துரை சந்திரகாந்தன், சம்பிக்க ரணவக்க ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

தேசிய சபையின் ஆரம்பக் கூட்டத்தில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான இரண்டு உப குழுக்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர மற்றும் நீண்ட கால தேசியக் கொள்கைகளை உருவாக்குவதற்காகவே தேசியக் கொள்கைக்கான துணைக் குழுவை அமைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களில் உடன்பாட்டை எட்டுவதற்காகவே பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான துணைக் குழுவை நிறுவப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE