Thursday 21st of November 2024 12:26:59 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் 4 பிராந்தியங்களை இன்று தன்னுடன் இணைத்துக் கொள்கிறது ரஷ்யா

ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் 4 பிராந்தியங்களை இன்று தன்னுடன் இணைத்துக் கொள்கிறது ரஷ்யா


ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் லூஹான்ஸ்க், கொ்சான், ஜபோரிஷியா, டொனட்ஸ்க் ஆகிய நான்கு பிராந்தியங்களை உத்தியோகபூர்வமாக ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ளும் அறிவிப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று வெளியிடவுள்ளார்.

ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள இந்தப் பிராந்தியங்களில் நடத்தப்பட்ட சா்ச்சைக்குரிய பொது வாக்கெடுப்பில், பெரும்பாலான மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

எனினும் இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என உக்ரைன் மற்றும் மேற்குலக நாடுகள் அறிவித்துள்ளன.

இன்று இணைப்பு விழாவை ரஷ்யா பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழா மொஸ்கோவின் சிவப்பு சதுக்கத்தில் (Red Square) இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு 2014 இல் கிரிமியாவை ஆக்கிரமித்து ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டதை ஒத்ததாக உள்ளது. தன்னிச்சையான வாக்கெடுப்பின் பின்னர் கிரிமியா ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் வெற்றி உரையும் நடைபெற்றது. அந்த இணைப்பு சர்வதேச சமூகத்தின் பெரும்பான்மையினரால் ஒருபோதும் அங்கீகரிக்கப்படவில்லை. அதேபோன்று சர்வதேச அங்கீகாரமின்றி தன்னிச்சையாக தற்போது ஆக்கிரமித்த உக்ரைன் நான்கு பிராந்தியங்களை ரஷ்யா இன்று தன்னுடன் இணைத்துக்கொள்ளவுள்ளது.

ஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஜபோரிஷியா ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், ரஷ்யாவுடன் தங்கள் பகுதிகளை இணைத்துக்கொள்ள பிராந்திய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா். இதனை ஏற்று, அந்த நான்கு பிரதேசங்களும் ரஷ்யாவுடன் அதிகாரபூர்வமாக வெள்ளிக்கிழமை இணைத்துக்கொள்ளப்படும் என ரஷ்ய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்காக மொஸ்கோவில் நடைபெறும் இணைப்பு விழாவில் ஜனாதிபதி விளாடிமிர் புடினும் பங்கேற்பார்.

புனித ஜோர்ஜ் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் அந்த விழாவில், லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஜபோரிஷியா பகுதிகளில் தற்போது ஆட்சி செலுத்தி வரும் நிா்வாகத் தலைவா்கள், ரஷ்யாவுடன் அந்தப் பகுதிகளை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவாா்கள் எனவும் டிமித்ரி பெஸ்கோவ் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE