Monday 7th of October 2024 09:22:12 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொள்ளை, கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி!

கொள்ளை, கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி!


கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா, அக்கரவிட பிரதேசத்தில் பெண்ணொருவரின் கைப்பையை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அப்போது, ​​குறித்த பெண்ணின் அலறலை அடுத்து அந்த இடத்திற்கு வந்த தந்தை மகன் இருவரை சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

குறித்த தாக்குதலில் மகன் உயிரிழந்துள்ளதுடன் அவரது தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நேற்று சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் சென்றுள்ள நிலையில் அங்கு சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை மன்னா கத்தியொன்றில் தாக்க முற்பட்டுள்ளார்.

அப்போது, ​​பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

பஹலகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE