கொவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டாய ஐந்து நாள் வீட்டு தனிமைப்படுத்தலை ஒக்டோபர் 14 முதல் அவுஸ்திரேலியா முடிவுக்குக் கொண்டு வரும் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தொற்று நோய் பரவலை அடுத்து விதிக்கப்பட்ட இறுதிக் கட்டுப்பாடும் இதன்மூலம் அவுஸ்திரேலியாவில் முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது.
தொற்று நோய்க்கு முந்தைய கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான சமூக முடக்கல் மூலம் வைரஸைக் கட்டுப்படுத்திய அவுஸ்திரேலியா இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிக தடுப்பூசிகளை செலுத்த மக்களை ஊக்குவித்ததுடன், படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
இந்நிலையில் தற்போது கொவிட் தொற்று நோயாளர்கள் 5 நாட்கள் கட்டாய வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் நீக்குவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா