உயர்தர பரீட்சையில் குறைந்த பட்ச பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட தேசிய விளையாட்டு வீரர்களும் பட்டப்படிப்பினை நிறைவு செய்ய முடியும் என விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.
விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய உயர்தர பரீட்சையில் குறைந்த தேர்ச்சி பெறுபேற்றினை கொண்ட தேசிய விளையாட்டு வீரர்கள் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.