திருகோணமலை மாவத்தத்தில் உள்ள தமிழர் செறிந்து வாழும் பகுதிகளான திரியாய் மற்றும் தென்னவன் மரபடி ஆகிய பகுதிகளில் உள்ள வயல் காணிகளில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதாக குறிப்பிட்டு அங்கு விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதென இற்றைக்கு 2 வருடங்களுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
குறித்த வழக்கில் வாதிடுவதற்காக இன்று திருகோணமலைக்கு சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் வாதிட்டனர்.
வழக்கின் இறுதில் தமிழரசு கட்சியின் திருகோணமலை காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த வழக்கு தொடர்பாகவும் பெரும்பான்மையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் திருக்கோணேஸ்வரம் கோவில் நில அபகரிப்பு தொடர்பாகவும் கருத்து வெளியிட்டார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை