நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த ஜெய் பீம் திரைப்படம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது சூர்யா உள்ளிட்டவர்கள் தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்த ஜெய் பீம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது.
வன்னிய சமூதாய மக்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறிப்பிட்ட காட்சி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதுடன், இயக்குநர் ஞானவேல் மன்னிப்பும் கோரியிருந்தார்.இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது புகாரளிக்கப்பட்டிருந்தது.
குறித்த புகாரின் அடிப்பயைடில் வேளச்சேரி பொலிசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இது தொடர்பில் சென்னை சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் சூர்யா, ஞானவேல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து அதன் விபரத்தை, வரும் 20ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரனை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என்று பொலிசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வேளச்சேரி பொலிசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் தாக்கல் செய்த மனுவை ஜூலை 21-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.